‘என்னை அறிந்தால்’ ரிலீஸில் திடீர் மாற்றம்?

‘என்னை அறிந்தால்’ ரிலீஸில் திடீர் மாற்றம்?

செய்திகள் 1-Jan-2015 7:08 PM IST Chandru கருத்துக்கள்

புத்தாண்டை முன்னிட்டு ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் படத்தின் டிரைலரும் நேற்று இரவு 12 மணிக்கு பட்டாசு சப்தங்கள் முழங்க வெளியிடப்பட்டது. ‘தல’ ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியிடப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.

ஆம்... இந்த ஆண்டு பொங்கலை ‘என்னை அறிந்தால்’ படத்தோடு ‘தல பொங்கலா’க கொண்டாட வேண்டும் என்று காத்திருந்தார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால், சிற்சில கடைசிகட்ட வேலைகள் மீதமிருப்பதால் படம் பொங்கலுக்கு ரிலீஸாவது கேள்விக்குறி ஆகியிருக்கிறதாம். இதனால் படத்தை வரும் 29ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடுவதற்கான வேலைகளில் களமிறங்கியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமாம்.

இப்போதைக்கு ஷங்கரின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ படம் மட்டுமே பொங்கல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கடைசி நேரத்தில் வேறு சில படங்களும் களமிறங்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;