2014ன் ‘டாப் 10’ மெலடிப் பாடல்கள்!

2014ன் ‘டாப் 10’ மெலடிப் பாடல்கள்!

கட்டுரை 31-Dec-2014 4:55 PM IST Chandru கருத்துக்கள்

’கல் நெஞ்சையும் கரைய வைக்கும் சக்தி’ மெலடிப் பாடல்களுக்கே உரிய தனிச்சிறப்பு. பாடல்கள் வந்தாலே ரசிகன் தியேட்டரைவிட்டு எழுந்து கேன்டீனுக்கு ஓடும் இன்றைய தமிழ் சினிமா சூழலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சில மெலடிப் பாடல்களின் பட்டியலிலிருந்து ‘டாப் 10’ பாடல்களை (2014) பட்டியலிட்டிருக்கிறோம். இந்தப் பாடல்கள் எஃப்.எம்.மில் ரசிகர்கள் நிறைய முறை விரும்பிக் கேட்ட பாடலாகவும், ‘ஐ’ டியூன்ஸ், ‘டி டியூப்’களில் அதிகமுறை ரசிக்கப்பட்ட பாடலாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், டி.இமான் ஆகியோரின் பாடல்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் ஆகியோரின் பாடல்களும், அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் பாடலும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

10. அன்பே... அன்பே... (இது கதிர்வேலன் காதல்)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிணி, ஹரிஷ் ராகவேந்திரா
பாடலாசிரியர் : யுகபாரதி

9. என் தாரா... (திருமணம் எனும் நிக்காஹ்)
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : சின்மயி, ஷஹப் ஃபரிதி
பாடலாசிரியர் : கார்த்திகா நேதா

8. யாருமில்லா தனியரங்கில்... (காவியத்தலைவன்)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஷ்வேதா மோகன், ஸ்ரீனிவாஸ்
பாடலாசிரியர் : பா.விஜய்

7. காதல் ஆசை... (அஞ்சான்)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, சூரஜ் சந்தோஷ்
பாடலாசிரியர் : கபிலன்

6. ஆகாசத்த நான் பாக்குறேன்... (குக்கூ)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : கல்யாணி நாயர், பிரதீப் குமார்
பாடலாசிரியர் : யுகபாரதி

5. கண்டாங்கி... (ஜில்லா)
இசை : டி.இமான்
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், விஜய்
பாடலாசிரியர் : வைரமுத்து

4. போ இன்று நீ... (வேலையில்லா பட்டதாரி)
இசை : அனிருத்
பாடியவர்கள் : தனுஷ்
பாடலாசிரியர் : தனுஷ்

3. என்னோடு நீ இருந்தால்... (ஐ)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடலாசிரியர் : கபிலன் வைரமுத்து

2. விண்மீன்... (தெகிடி)
இசை : நிவாஸ் பிரசன்னா
பாடியவர்கள் : அபய் ஜோத்புர்கர், சைந்தவி பிரகாஷ்
பாடலாசிரியர் : கபிலன்

1. நான்... நீ... (மெட்ராஸ்)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : தீக்ஷிதா, சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : உமா தேவி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;