விக்ரமின் ‘பத்து எண்றதுக்குள்ள’ ரிலீஸ் எப்போது?

Release of ’10 Endradhukulla’ confirmed

செய்திகள் 31-Dec-2014 12:50 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் நடித்து, அனைவரின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஐ’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சமீபத்தில் மும்பை, ஹைதாராபாத் சென்று வந்தார் விக்ரம். ’ஐ’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. விஜய்மில்டன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்து விட்டதாம்.

அடுத்து இப்படத்திற்காக நேப்பாளில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். இன்னும் ஒரு சில நாட்களில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம். ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் இப்படத்தை ’ஐ’ பட ரிலீஸுக்கு பிறகு 3 மாதங்கள் கழித்து, அதாவது கோடை விடுமுறை காலத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தில் விக்ரமுடன் முதல் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;