2014ன் ‘டாப் 10’ சூப்பர் ஹிட் பாடல்கள்!

2014ன் ‘டாப் 10’ சூப்பர் ஹிட் பாடல்கள்!

கட்டுரை 31-Dec-2014 11:55 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய சினிமாக்களின் சிறப்பே பாடல்கள்தான். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பாடல்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவே இருக்கும். ஆரம்ப காலகட்ட தமிழ்ப்படங்களில் பாடல்களுக்கிடையேதான் சிற்சில காட்சிகளே வரும். கொஞ்சம் கொஞ்சமாக பாடல்களின் ஆதிக்கம் குறைந்து இப்போது ஒரு தமிழ்ப்படத்தில் 5 பாடல்களுக்கும் குறைவாகவேதான் இடம்பெறுகிறது. ‘காவியத்தலைவன்’ போன்ற இசை சம்பந்தப்பட்ட படங்கள் மட்டும் விதிவிலக்காக அதிக பாடல்களோடு உருவாகி வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவராலும் பரவலாக முணுமுணுக்கப்பட்ட, எஃப்.எம். ரேடியோக்களில் அதிக அளவில் ஒலித்த பாடல்களின் பட்டியலை மையமாக வைத்து 2014ன் ‘டாப் 10’ ஹிட் பாடல்களை பட்டியலிட்டிருக்கிறோம்.10. மோனா கேஸோலினா (லிங்கா)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : மனோ, நீத்தி மோகன், தன்வி ஷா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

9. அதாரு... அதாரு... (என்னை அறிந்தால்)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், கானா பாலா
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

8. நீ என்ன பெரிய அப்பா டக்கரா... (என்னமோ ஏதோ)
இசை : டி.இமான்
பாடியவர்கள் : அனிருத், ஹர்ஷிதா கிருஷ்ணன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

7. ஜிங் சக்கான்... (வீரம்)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : மகிழினி மணிமாறன், புஷ்பவனம் குப்புசாமி
பாடலாசிரியர் : விவேகா

6. ஊதுங்கடா சங்கு (வேலையில்லா பட்டதாரி)
இசை : அனிருத்
பாடியவர்கள் : அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்

5. வாட் எ கர்வாட் (வேலையில்லா பட்டதாரி)
இசை : அனிருத்
பாடியவர்கள் : அனிருத், தனுஷ்
பாடலாசிரியர் : தனுஷ்

4. டார்லிங்கு டம்பக்கு (மான் கராத்தே)
இசை : அனிருத்
பாடியவர்கள் : பென்னி தயாள், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : யுகபாரதி

3. டாங்கா மாரி... (அனேகன்)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ‘மரண கானா’ விஜி, தனுஷ், நவீன் மாதவ்
பாடலாசிரியர் : ரோகேஷ்

2. செல்ஃபிபுள்ள (கத்தி)
இசை : அனிருத்
பாடியவர்கள் : விஜய், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

1. மெரசலாயிட்டேன்... (ஐ)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : அனிருத், நீத்தி மோகன்
பாடலாசிரியர் : கபிலன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிச்சுவாகத்தி - என்ன சொன்ன பாடல் வீடியோ


;