ராஜீவ் மேனன் உதவியாளரின் ‘மனித காதல் அல்ல’

ராஜீவ் மேனன் உதவியாளரின் ‘மனித காதல் அல்ல’

செய்திகள் 31-Dec-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேன்னிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அக்னி. இவர் கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘மனித காதல் அல்ல’. இந்தப் படம் குறித்து அக்னி கூறும்போது, ‘‘பூமியில் தாய், தந்தையை இழந்து தவிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு உதவி புரிய வானுலக கடவுளால் ‘பாய் ஏஞ்சல்’ என்று அழைக்கப்படும் ஒரு இளைஞன் பூமிக்கு வருகிறார். பூமிக்கு வந்த அந்த இளைஞன் தன் கடமையை மறந்துவிட்டு அந்த பெண்ணுடன் காதல் கொள்கிறார். அந்த பெண்ணுக்கும் அந்த இளைஞன் மீது காதல் வருகிறது. இதனால் ஏற்படும் திருப்பங்களும், சுவாரஸ்ய சம்பவங்களும் தான் ‘மனித காதல் அல்ல’ படத்தின் கதைக் கரு. முற்றிலும் புதிய கோணத்தில் கற்பனை கலந்த நகைச்சுவை படமாக இதை இயக்கியிருக்கிறேன். இதில் பாய் ஏஞ்சல் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். கதாநாயகியாக புதுமுகம் தருஷி நடித்துள்ளார்’’ என்றார்.

‘பிளாக் ஸீ மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கே.ஈஸ்வரமூர்த்தி, ஏ.வி.ஆறுமுகம் தயாரித்துள்ள இப்படத்தில் நாசர், மனோபாலா, முத்துக்காளை, கிரேன் மனோகர், தேவிகா முதலானோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாரதிராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஷமீர் இசை அமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 2-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெகிடி


;