லதா ரஜினிகாந்துக்கு எந்த பங்கும் இல்லை! - மீடியா ஒன்

லதா ரஜினிகாந்துக்கு எந்த பங்கும் இல்லை! - மீடியா ஒன்

செய்திகள் 30-Dec-2014 2:51 PM IST VRC கருத்துக்கள்

‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததன் மூலம் ‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தப் பட தயாரிப்பு சம்பந்தமாக திருமதி. லதா ரஜினிகாந்தும் சில ஒப்பந்தங்களில் கியாரண்டராக கையெழுத்திட்டுள்ளார். இதனை வைத்து இந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்சனையில் திருமதி. லதா ரஜினிகாந்தின் பெயரும் அடிப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ‘மீடியா ஒன் குளோபல்’ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் முரளி மனோகர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘கோச்சடையான்’ பட தயாரிப்பு சம்பந்தமாக இந்நிறுவனத்திற்கு சில பண நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான்! இது சாதாரணமாக பிசினஸ் விஷயங்களில் ஏற்படும் நெருக்கடிகள் தான்! இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க எங்களுக்கு வருகிற மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்து வைப்போம். இந்த பண பிரச்சனை விஷயத்தில் திருமதி. லதா ரஜினிகாந்துக்கு எந்த பங்கும் கிடையாது. அவர் வெறும் கியாரண்டர் மட்டும் தான்! இந்த பிரச்சனை முழுக்க முழுக்க எங்கள் நிறுவனம் சார்ந்தது. இதனை நாங்கள் விரைவில் தீர்த்து வைப்போம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யாகாவாராயினும் நா காக்க


;