‘ஐ’ தலைப்பு எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியுமா?

‘ஐ’ தலைப்பு எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியுமா?

செய்திகள் 30-Dec-2014 1:10 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘ஐ’ என்ற பெயர் வைக்கப்பட்டபோது பலரும் புருவம் உயர்த்தினார்கள். ‘ஐ’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து பலரும் ஆராயத் தொடங்கினார்கள். ஏற்கெனவே படத்தின் கதாசிரியர்களான சுபா ‘ஐ’க்கான விளக்கத்தை தங்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்கள். தற்போது அந்த தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இரட்டையர்கள் சுபாவில் ஒருவரான சுரேஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருப்பது அப்படியோ இங்கே உங்களுக்காக...

‘ஐ’ என்ற தலைப்பு எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? கதையில் கூனன் ஒரு முக்கியப் பாத்திரம். தலைப்பில் கூன் போட்டு வளைந்த எழுத்துகள் இடம்பெற்றால் நன்றாயிருக்கும் என்று ஷங்கர் விரும்பினார்.

ஐ, ஜ போன்ற எழுத்துகள் அவருடைய ஸ்க்ரீன் டெஸ்ட்டில் வெற்றிபெற்றன. பல்கலைக்கழக தமிழ் அகராதியில் ‘ஐ’யில் துவங்கும் வார்த்தைகளைத் தேடலாம் என்று பார்த்தால் மாபெரும் இன்ப அதிர்ச்சி. ‘ஐ’ என்ற ஒற்றை எழுத்தே கதைக்கு மிகப் பொருத்தமான பல அர்த்தங்களைத் தந்தது. (முக்கியமாக அழகு!)

உடனே போடு டைரக்டருக்கு ஃபோன். அவருக்கும் ஆச்சரியம். இன்னொரு அகராதியிலும் அர்த்தங்களை சரிபார்த்து, உடனே தலைப்பைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். ‘ஐ’ பிறந்தது. தை பிறக்கும் முன்பே திரை பார்க்கக்கூடும்..!

என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;