பாலசந்தர் இல்லமாக மாறப்போகும் ‘படைப்பகம்’

பாலசந்தர் இல்லமாக மாறப்போகும் ‘படைப்பகம்’

செய்திகள் 30-Dec-2014 12:26 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவரான ‘இயக்குனர் சிகரம்’ பாலசந்தர் (வயது 84) சமீபத்தில் இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு பெரும்பாலான சினிமா, அரசியல் பிரபலங்களும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதோடு அவரின் மறைவு குறித்த கண்ணீர் பேட்டியையும் பல பிரபலங்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’யின் சார்பாக ‘பாலசந்தர் நினைவஞ்சலி’ கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்துகொண்டு பாலசந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்று (டிசம்பர் 30) காலை இயக்குனர் சங்கம் சார்பாக பாலசந்தருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாலசந்தரின் திருவுருவ படத்தை ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா திறந்து வைக்க, அதற்கு இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமனும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பெரிய மலர் மாலை ஒன்றை அணிவித்தனர். பின்னர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வரும் பிப்ரவரி மாதம் சென்னை காமராஜர் அரங்கத்தில் பாலசந்தருக்கு மீண்டும் நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக சங்கத்தின் செயலாளரான இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார். இக்கூட்டத்திற்கு பாலசந்தரின் படங்களில் பணியாற்றிய அத்தனை நட்சத்திரங்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் அழைப்புவிடுக்க உள்ளதோடு, தென்னிந்திய சினிமாவிலிருக்கும் முக்கிய பிரபலங்கள் பலருக்கும் அழைப்புவிடுக்கவிருக்கிறார்கள். இந்த விழாவில் பாலசந்தர் பெயரில் விருது வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்

தவிர மயிலாப்பூரில் உள்ள ஏதாவது ஒரு தெருவுக்கு பாலசந்தரின் பெயரை வைக்கவும், லஸ் கார்னரில் பாலசந்தரின் திருவுருவுச் சிலை ஒன்றைத் திறக்கவும் தமிழக அரசிடம் இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் ‘தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்’ இதுநாள்வரை ‘படைப்பகம்’ என்ற பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. இனி, அதன் பெயரை ‘பாலசந்தர் இல்லம்’ என மாற்றவிருக்கிறார்களாம். இந்நிகழ்ச்சியில், பாலசந்தரிடம் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த மோகன் என்பவருக்கு 1 லட்ச ரூபாய் பண உதவி செய்தார் கலைப்புலி’ தாணு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;