‘யு’ வாங்கிய ‘அனேகன்’... டிரைலர், பட ரிலீஸ் எப்போது?

‘யு’ வாங்கிய ‘அனேகன்’... டிரைலர், பட ரிலீஸ் எப்போது?

செய்திகள் 30-Dec-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

‘டாங்கா மாரி.... ஊதாரி....’ என ஊரெங்கும் ‘அனேகன்’ படத்தின் பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கே வெளியாக வேண்டிய படம் சிற்சில வேலைகள் காரணமாக ரிலீஸ் தள்ளியிருக்கிறது. ஹாரிஸின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘அனேகன்’ ஆல்பத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு தனுஷின் நான்கு வித்தியாசமான வேடங்களையும் தாங்கி வந்த ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

இந்நிலையில், சென்சார் சான்றிதழுக்காக நேற்று (டிசம்பர் 29) ‘அனேகன்’ படம் தணிக்கைகுழு அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் புத்தாண்டின் முதல்வாரத்தில் வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பதாக ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் கூறியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;