இந்த வருடம் 4, அடுத்த வருடம் 4 - கிருஷ்ணாவின் சாதனை!

இந்த வருடம் 4, அடுத்த வருடம் 4 - கிருஷ்ணாவின் சாதனை!

செய்திகள் 30-Dec-2014 10:19 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடம் மட்டும் நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் 4 படங்கள் வெளிவந்திருக்கின்றன. ‘யாமிருக்க பயமே’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘வன்மம்’ ஆகிய மூன்று படங்களில் ஹீரோவாகவும், ‘வல்லினம்’ படத்தில் கெஸ்ட்ரோலிலும் நடித்திருந்தார் கிருஷ்ணா. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து ‘யட்சன்’ படத்தில் நடித்து வருகிறார் கிருஷ்ணா. இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி நடிக்கிறார்.

அதேபோல் கிருஷ்ணா நடிக்கும் இன்னொரு படமான ‘யாக்கை’ படத்திலும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார் சுவாதி. ‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கும் இப்படம் ஒரு ரொமான்டிக் த்ரில்லர்! 30 சதவிகிதத்திற்கும் மேல் படப்பிடிப்பு முடிந்திருக்கும் ‘யாக்கை’ படத்தில் போலீஸாக பிரகாஷ் ராஜும், வில்லனாக சோமசுந்தரமும் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட 2 வருடங்கள் நிறைய விஷயங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறாராம் இயக்குனர் குழந்தை வேலப்பன்.

யட்சன், யாக்கை படங்களோடு ‘விழித்திரு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் கிருஷ்ணா. அதோடு ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் இன்னொருபுறம் போய்க்கொண்டிருக்கின்றன. ஆக மொத்தம் 2014ம் ஆண்டைப்போலவே 2015ம் ஆண்டிலும் கிருஷ்ணாவின் நடிப்பில் 4 படங்கள் வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரா - டிரைலர்


;