‘மீகாமன்’, ‘கப்பல்’ இதில் எது வெற்றிப் படம்?

‘மீகாமன்’,  ‘கப்பல்’ இதில் எது வெற்றிப் படம்?

செய்திகள் 30-Dec-2014 9:57 AM IST VRC கருத்துக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, ‘வெள்ளக்கார துரை’ என நான்கு படங்கள் ரிலீசாசனது. இந்த நான்கு படங்களில் எந்தெந்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வராத நிலையில் சமீபத்தில் ‘மீகாமன்’ படத்தின் சக்சஸ் மீட்டை நடத்தினார்கள் அப்படக் குழுவினர். இதனை தொடர்ந்து நேற்று ‘கப்பல்’ படத்தின் சக்சஸ் மீட்டும் நடந்தது. ‘கப்பல்’ படக்குழுவினர் ஒவ்வொருவராக பேசும்போது ‘கப்பல்’ படம் வெற்றிப் பெற்றதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.

‘கப்பல்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி.கிருஷ் நன்றி கூறி முடித்ததும் அவரிடம், ‘‘மீகாமன்’ சக்சஸ் என்று சொன்னாங்க. இப்போது நீங்களும் உங்க படம் ஜெயிச்சதா சொல்றீஙக்? உண்மையில் யார் படம் வெற்றிப் பெற்றது?’’ என்று கேட்க, ‘‘இரண்டு படமும் ஜெயிச்சிருக்கு! ஒரே கிளாஸுல இரண்டு பேர் ஒரே மாதிரி மார்க் எடுக்கறதில்லையா? அதுமாதிரி தான் இதுவும். ‘கப்பல்’ சக்சஸ் தான்! உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தியேட்டர் பக்கம் போய் பார்த்தால் தெரியும்’’ என்றார்! அவரிடம் அடுத்த கேள்வியாக படத்தில் நிறைய இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் இருக்கிறதே, உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா?’’ என்று கேட்டதற்கு, ‘‘காமெடிக்காக அந்த காட்சிகளை வைத்திருக்கிறேன், மத்தபடி எனக்கு சமூக பொறுப்பில்லாமல் இல்லை! என்னோட அடுத்த படத்தில் இதுபோன்ற ஆபாச காட்சிகள் இல்லாமல், சமூக பொறுப்புடன் படத்தை இயக்கிக் கொள்கிறேன்’’ என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;