ஒரே நாளில் விஜய், சூர்யா, தனுஷ் படங்கள்

ஒரே நாளில் விஜய், சூர்யா, தனுஷ் படங்கள்

செய்திகள் 29-Dec-2014 4:37 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யும், வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் சூர்யாவும், பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ படத்தில் தனுஷும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு தனுஷின் ‘அனேகன்’ படம் இன்று சென்சாருக்கு செல்கிறது. இது ஒருபுறமிருக்க, வரும் புத்தாண்டு தினத்தன்று சன் டிவியில் விஜய், சூர்யா, தனுஷ் படங்கள் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான ‘அஞ்சான்’ படம் ‘உலகத் தொலைகாட்சிகளில் முதல்முறை’யாக ஒளிபரப்பாகவிருக்கிறது. அதேபோல் விஜய், அமலாபால், சந்தானம் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவா’ படமும் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த இரண்டு படங்களோடு இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படமும் ஒளிபரப்பாகவிருப்பதாக சேனல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ‘அஞ்சான்’ பட புத்தாண்டு புரோமோக்கள் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;