9 நாளில் 214 கோடி வசூல் செய்த பீகே!

9 நாளில் 214 கோடி வசூல் செய்த பீகே!

செய்திகள் 29-Dec-2014 1:10 PM IST VRC கருத்துக்கள்

வசூலில் சாதனை புரிந்த ’3 இடியட்ஸ்’ மற்றும் ‘ஹேப்பி நியூ இயர்’ ஹிந்தி படங்களின் வசூல் சாதனையை இப்போது ஆமீர்கானின் ‘பீகே’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின் படி டிசம்பர் 19-ஆம் தேதியன்று வெளியான ‘பீ.கே’, 9 நாட்களில் இந்திய அளவில் 214.14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதற்கு முன ஆமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தொட கிட்டத்தட்ட 70 நாட்கள் ஆனதாம். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘ஹேப்பி நியூ இயர்’ திரைப்படம், வசூலில் 200 கோடி ரூபாயை தொட 19 நாட்கள் ஆனதாம்! ஆனால் ஆமீரின் ‘பீகே’ 9 நாளிலேயே 214 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அந்த படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. இப்போதும் வசூல் சாதனையில் முன்னிலையில் இருப்பது இதே ஆமீர்கான் நடித்த ‘தூம் 3’ படம் தானாம்! இப்படம் 9 நாட்களில் 284.72 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;