தென்னிந்திய அளவில் முதல் 2 இடங்களில் ‘ஐ’

தென்னிந்திய அளவில் முதல் 2 இடங்களில் ‘ஐ’

செய்திகள் 29-Dec-2014 12:18 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான ‘ஐ’ படத்தின் டீஸர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. உலகமெங்குமிருக்கும் தமிழ் ரசிகர்களும், இந்திய அளவிலிருக்கும் சினிமா ரசிகர்களும் இப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், டீஸர் வெளியானது முதல் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து, ஷேர் செய்து வந்தனர். இதுவரை எந்த தென்னிந்திய சினிமாவும் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று சாதனை படைத்தது ‘ஐ’ டீஸரின் ‘யு டியூப்’ பார்வையாளர்கள் எண்ணிக்கை. அதாவது தற்போதைய நிலவரப்படி இந்த டீஸரை 94 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இந்திய அளவிலும் ‘ஐ’ பட டீஸர் 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்நிலையில் ‘ஐ’ படத்தின் 2 நிமிட டிரைலர் ஒன்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீஸரைப் போலவே இந்த டிரைலருக்கும் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான 12 நாட்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை கண்டுகளித்திருக்கின்றனர். ‘ஐ’ டீஸரைத் தொடர்ந்து 2வது இடத்தில் ‘லிங்கா’ டிரைலரும், 3வது இடத்தில் ‘கோச்சடையான்’ டிரைலரும் இருந்து வந்தது. தற்போது இந்த இரண்டையும் முந்தி தென்னிந்திய அளவில் ‘யு டியூப் பார்வையாளர்கள்’ எண்ணிக்கையில் முதல் 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது விக்ரமின் ‘ஐ’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;