புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் வழங்கும் அஜித்!

புத்தாண்டுக்கு டபுள் ட்ரீட் வழங்கும் அஜித்!

செய்திகள் 29-Dec-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

புத்தாண்டு என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்... என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு இந்தப் புத்தாண்டில் இரட்டிப்பு சந்தோஷம் காத்திருக்கிறது. காரணம், அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசையும், டிரைலரும் அன்றுதான் வெளியாகிறது. இப்படத்திற்காக மொத்தம் 7 சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அதில் ஏற்கெனவே ‘அதாரு... அதாரு’ பாடல் சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மீதமுள்ள 6 பாடல்களும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும்.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை இரவு வெளியாகவிருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படத்தின் டிரைலரையும் பாடல்கள் வெளியாகும் ஜனவரி 1ஆம் தேதியே வெளியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து கடைசிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதமாக போய்க் கொண்டிருக்கின்றன. படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த புத்தாண்டுக்கு தனது ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ தரவிருக்கிறார் ‘தல’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;