’பீகே’யை ரீ-மேக் செய்கிறாரா ஷங்கர்?

’பீகே’யை ரீ-மேக் செய்கிறாரா ஷங்கர்?

செய்திகள் 29-Dec-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

ஆமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீகே’ ஹிந்தி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர், படத்தில் அமைந்துள்ள யதார்த்த காமெடி, ஆமீர்கானின் சிறந்த நடிப்பு மற்றும் தனக்கு இப்படம் பிடித்திருந்தது குறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்ர் .ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் இரானி தான் ‘பீகே’ படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘3 இடியட்ஸ்’ படத்தை விஜயை வைத்துய் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்த இயக்குனர் ஷங்கர், ‘பீகே’ படத்தையும் தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;