25 லாரி புல்லுக்கட்டுகளுடன் அரண்மனை செட்!

25 லாரி புல்லுக்கட்டுகளுடன் அரண்மனை செட்!

செய்திகள் 29-Dec-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் இருக்கும் இரண்டு வில்லன்களுக்கு இடையில் நடக்கும் மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’. கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்தை கூறும் இப்படத்தில் ஒரு தாதாவிடம் நட்பு வைக்கும் நாயகனின் குடும்பம் மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளேன் என்று கூறுகிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் கோபால். இந்த படத்திற்காக கலிங்கராஜபுரம் என்ற இடத்தில் இருபத்தி ஐந்து லாரி புல்லுக்கட்டுகளை கொண்டு 60 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனை ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கும் மேல் நடந்ததாம்!

‘தேவகலா ஃபிலிம்ஸ்’ படம் நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் சஞ்சீவ் முரளி, ஸ்ரீரக்‌ஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்க, இவர்களுடன் ரஞ்சித், ‘தலைவாசல்’ விஜய், வனிதா, பாலாசிங், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி முதலானோரும் நடித்துள்ளனர். மலையாளத்தில் புகழ் பெற்று விளங்கிய படலாசிரியர் பிச்சு திருமலா. அவரது புதல்வர் சுமன் பிச்சு இந்த படத்தின் மூலம் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பொன் பிரகாஷ் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு அய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடந்த்து, இவ்விழாவில் இயக்குனர்கள் ஷக்தி சிதம்பரம், பிரவீன் காந்தி, பின்னணி பாடகி சித்ரா உட்பட பல திரையுலக் பிரபலங்கள் கலந்துகொண்டு படக் குழுவினரை வாழ்த்தி பேசினார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;