‘கேப்டன் ஆஃப் ஃப்ரென்ட்ஷிப்’ ஆர்யா!

‘கேப்டன் ஆஃப் ஃப்ரென்ட்ஷிப்’ ஆர்யா!

செய்திகள் 29-Dec-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

கடந்த 25-ஆம் தேதியன்று வெளியான ‘மீகாமன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி ‘மீகாமன்’ பட டீம் செய்தியாளர்களை சந்தித்தனர். படம் வெற்றி பெற்றதையொட்டி நடந்த இந்த சந்திப்பில் மகிழ்ச்சியுடன் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி,

‘‘ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை நாம் புரிந்துகொண்டு சரியாக கொடுத்தால் அதை வரவேற்க ரசிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பது இப்படத்தின் வெற்றி உணர்த்தியுள்ளது. அத்துடன் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தந்த ஆதரவும் இப்பட வெற்றிக்கு பெரும் உறுதுணை புரிந்துள்ளது. இன்னொரு முக்கிய விஷயத்தையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இப்படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்பதில் ஒருசில சிக்கல்கள் ஏற்பட்டது. அப்போது அந்த சிக்கலை தீர்த்து வைத்து இப்படம் வெளியாக பெரும் உதவி புரிந்தவர் படத்தின் ஹீரோ ஆர்யா தான்! அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்’’ என்றார்.
இதை தொடர்ந்து படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பேசிய விஷயம் தான் ஹைலைட்டாக அமைந்தது. எஸ்.எஸ்.தமன் ஆர்யாவை பார்த்து பேசும்போது, ‘‘மச்சான், நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த்தே உன்னை பற்றி பேசதான்! உன்னை எல்லோரும் ’கேப்டன் ஆஃப் த ஷிப்’ என்று சொல்லலாம். ஆனால் நான் உன்னை ‘கேப்டன் ஆஃப் ஃப்ரென்ட்ஷிப்’ன்னு சொல்லுவேன். இன்னைக்கு நாங்க எல்லாம் இந்த சக்சஸ் மீட்டுக்கு வந்து பேசிக்கிட்டிருக்கிறோம் என்றால் அதுக்கு காரணம் மச்சான் ஆர்யா தான்! கடைசி நேரத்துல மூழ்க இருந்த ‘மீகாமன்’ என்ற கப்பலை மூழ்க விடாமல் காப்பாற்றியது ஆர்யா தான். இந்த படத்தின் தயாரிப்பாளரும், மச்சான் ஆர்யாவும் ஏழெட்டு ஆண்டு கால நண்பர்கள்! அவங்களோட நல்ல நட்பு தான் இப்படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது. ‘மச்சான்’ ஆர்யாவுக்கு நன்றி’’ என்றார் எஸ்.எஸ்.தமன்.

‘மீகாமன்’ பட வெளியீடு சம்பந்தமாக இப்பட தயாரிப்பாளருக்கு சில பண நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும், அதை தீர்த்து வைத்து படத்தை குறித்த நேரத்தில் வெளியிட உதவி புரிந்தவர் ஆர்யா என்றும், அதை கருத்தில் கொண்டு தான் இயக்குனர் மகிழ் திருமேனியும், இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.தமனும் இப்படி பேசியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;