நா.முத்துக்குமாரின் பெரிய சாதனை!

நா.முத்துக்குமாரின் பெரிய சாதனை!

செய்திகள் 27-Dec-2014 1:45 PM IST VRC கருத்துக்கள்

பாடலாசிரியர்களை பொறுத்தவரையில் இதுவரை யாரும் செய்திராத ஒரு சாதனையை நா.முத்துக்குமார் செய்து வருகிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக படங்களுக்கு, அதிக பாடல்கள் எழுதியிருப்பது நா.முத்துக்குமார் தான்! சென்ற 10 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் (2014) 35 படங்களுக்கு, மொத்தமாக 107 பாடல்களை எழுதி அந்த சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறார் நா.முத்துக்குமார்! இந்த வருடம் பாடல்கள் எழுதிய அந்த 35 படங்களில் 10 படங்களுக்கு மொத்த பாடல்களை எழுதியிருக்கிறார் என்ற பெருமையும் இவருக்கு உண்டு! இதனை கருத்தில் கொண்டு தனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார் நா.முத்துக்குமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;