விருதுகளை வாங்கிக் குவிக்கும் குற்றம் கடிதல்!

விருதுகளை வாங்கிக் குவிக்கும் குற்றம் கடிதல்!

செய்திகள் 27-Dec-2014 1:09 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் கடந்த 18-ஆம் தேதி துவங்கி, 25-ஆம் தேதி வரை சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நடந்தது. இவ்விழாவில் அமெரிக்க, ஈரான், இராக், பிரான்சு, துருக்கி ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளில் தயாரான 147 படங்கள் திரையிடப்பட்டன. போட்டி பிரிவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்பட்டன. இதில் ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ‘குற்றம் கடிதல்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு விருது வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக ‘சதுரங்கவேட்டை’ தேர்வானது. சிறப்பு ஜூரி விருது பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு கிடைத்தது. ‘அமிதாப்பச்சன் நம்பிக்கை நட்சத்திர விருது’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வழங்கப்பட்டது.

‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃப்வுன்டேஷன்’ அமைப்பு நடத்திய இந்த சென்னை திரைப்பட விழாவின் இறுதி நாளன்று சரத்குமார், ராதிகா, மோகன், இயக்குனர் பி.வாசு, பூர்ணிமா பாக்யராஜ், மனோபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;