’ஹிப் பாப் தமிழா’வை அறிமுகப்படுத்த தான் இந்த விழா! - விஷால்

’ஹிப் பாப் தமிழா’வை அறிமுகப்படுத்த தான் இந்த விழா! - விஷால்

செய்திகள் 27-Dec-2014 12:32 PM IST VRC கருத்துக்கள்

‘‘பொதுவாக இது மாதிரி ஆடியோ ஃபங்ஷன் எல்லாம் வைக்கணுங்கிற ஆர்வம் எங்களுக்கு இருந்தது கிடையாது. ஆனா இந்த ஆடியோ ஃபங்ஷனை பொறுத்தவரைக்கும் இப்படத்தோட இசை அமைப்பாளர் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்ததான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தோம்’’ என்றவாறு பேச ஆரம்பித்தார் விஷால்! இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ‘ஆம்பள’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தான் விஷால் இப்படி பேச துவங்கினார். தொடர்ந்தவர்.

‘‘நானும், சுந்தர்.சி.யும் இணைந்த ‘மதகஜராஜா’ படம் இன்னும் ரிலீசாகவில்லை. இப்படியிருக்க இவர்கள் மீண்டும் இணைந்து படம் பண்றாங்களே, சென்டிமென்டாக இது ஒர்க்-அவுட்டாகுமா என்று நிறைய பேர் பேசினாங்க! ஆனா நாங்க அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சுந்தர்.சி. இயக்கத்தில் ‘மதகஜராஜா’ படத்தில் நடிக்கும்போதே என்னிடம் இப்படத்தின் ஒன் லைனை சொல்லியிருந்தார் சுந்தர்.சி. அந்த ஒன் லைன் எனக்கு பிடித்திருந்ததால் இதை நாம் பண்ணலாம் என்று அவரிடம் அப்போதே சொல்லியிருந்தேன். கடந்த செப்டம்பர் 20-ல் ‘ஆம்பள’யை துவங்கினோம். 3 மாதத்தில் முடித்து விட்டோம். இப்போது படத்தின் ரீ- ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகிறது. படம் இன்னும் ஒரு வாரத்தில் ரெடியாகி விடும்.

படத்தை திட்டமிட்டபடியே பொங்கலுக்கு கொண்டு வர இருக்கிறோம். முதலில் இப்படத்திற்கு ஐந்து இசை அமைப்பாளர்களை வைத்து பாடல்கள் பண்ணத்தான் திட்டமிட்டிருந்தோம். அப்படி ஒரு பாடலை ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியிடம் கொடுக்கலாம் என்று அவரை அழைத்து பேசும்போது, அவர் ஒரு பாடலை மட்டும் பண்ணுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மொத்த படத்தையும் நானே பண்ணுவதாக இருந்தால் பார்க்கலாம் என்றார். இப்படி பெரும் தன்னம்பிக்கையோடு அவர் அப்படி கூறியபோது நானும், சுந்தர்.சி.யும் யோசித்தோம். அதற்கப்புறம் அவருடன் உட்காந்து பேசி மொத்த படத்தையும் அவரிடமே ஒப்படைத்தோம். அவருடனான டிஸ்கஷனுக்காக நாங்கள் லண்டன், பாரிஸ் என்றெல்லாம் போகவில்லை. இங்கு சென்னையிலுள்ள அபிராமபுரத்தில் தான் டிஸ்கஷன் எல்லாம் நடந்தது. அதற்கான செலவு என்று பார்த்தால் மொத்தமே 2500 ரூபாய் தான்! ஆதி, நாங்கள் எதிர்பார்த்ததை விட சூப்பரான பாடல்களை தந்துள்ளார். நாளைக்கு பெரிய ஒரு இடத்திற்கு ஆதி வரப் போகிறார் என்பது நிச்சயம். அவரை இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றார் விஷால்!

இதற்கு முன்னால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி., படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி மற்றும் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செலவமணி, சுசீந்திரன், நடிகர்கள் ஆர்யா, மன்சூரலிகான், விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான அன்பு செழியன், இசை அமைப்பாளர் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி, நடிகை குஷ்பு சுந்தர் முதலானோர் ‘ஆம்பள’ படம் பற்றி பேசினார்கள்’
விழாவின் இறுதியில் படத்தின் ஆடியோவை இயக்குனர் சுசீந்திரனும், விநியோகஸ்தர் அன்பு செழியனும் இணைந்து வெளியிட, நடிகர் ஆர்யாவும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் இணைந்து பெற்று கொண்டனர்.

பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் ‘ஆம்பள’ படத்தின் விஷால், ஹன்சிகா மோத்வானியுடன் பிரபு, மதுரிமா, மாதவி லதா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், வைபவ், சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;