கயல் - விமர்சனம்

அழகானவள்!

விமர்சனம் 26-Dec-2014 6:02 PM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ பி.மதன்
இயக்கம் : பிரபு சாலமன்
நடிப்பு : சந்திரன், ஆனந்தி, வின்சென்ட், யார் கண்ணன், பாரதி கண்ணன், யோகி தேவராஜ்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு :வி.மகேந்திரன்
எடிட்டிங் : சாமுவேல்

‘விஷுவல் பியூட்டி ஸ்பெஷல்’ இயக்குனர் பிரபுசாலமானின் அடுத்த படைப்பு ‘கயல்’.

கதைக்களம்

அனாதைகளான சந்திரனும், வின்சென்ட்டும் உயிருக்கு உயிரான நண்பர்கள். வாழ்க்கை ரசிப்பதற்கே என்ற கொள்கையுடைய இருவரும் ஊர் ஊராக பயணிக்கிறார்கள். வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி ஒன்றிற்கு இருவரும் உதவி செய்ய போய், அந்த பெண் வீட்டு அடியாட்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். இந்நிலையில் சந்திரனுக்கு அந்த வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஆன்ந்தி மீது காதல் வருகிறது.

சில நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு ஓடிப்போன அந்த பெண் திரும்பி வருவதால் சந்திரனையும், வின்சென்டையும் விட்டு விடுகிறார்கள். பின்னர் இருவரும் தங்களின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு பயணமாகிறார்கள்! கன்னியாகுமரி சென்ற சந்திரன், ஆனந்தி நினைவாகவே இருக்க, ஆனந்தியும் சந்திரனை விரும்பி, அவரை தேடி கன்னியாகுமரி வருகிறார். ஆனந்தி தன்னை தேடி கன்னியாகுமரி வந்திருப்பதை அறியும் சந்திரன் ஒரு பக்கம் அவளைத் தேட, ஆனந்தியும் ஒரு பக்கம் சந்திரனை தேடி அலைகிறார். கடைசியில் இருவரும் சந்தித்தார்களா, அவர்களது காதல் கை கூடியதா என்பது தான் ‘கயல்’.

படம் பற்றிய அலசல்

பிரபு சாலமனின் முந்தைய படங்களிலிருந்த திரைக்கதை நேர்த்தியும், கதை சொல்லுதல் பாணியும் இப்படத்தில் மிஸ்ஸிங். இடைவேளை வரை சீராக பயணிக்கும் திரைக்கதை இடைவேளைக்கு பிறகு தேவையில்லாத காட்சிகளுடன் நீளமாக பயணித்து நம்மை கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. வழக்கம்போல் அழகான லொகேஷன்கள், கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, காட்சிக்கேற்ற பின்னணி இசை என இப்படத்திலும் பிரபு சாலமனின் டீம் சாதித்திருக்கிறது. பாடல்கள் கேட்பதற்கு நன்றாகயிருந்தாலும் படத்தில் அடிக்கடி வருவதால் அலுப்புத் தட்டுகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்திரன் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நாயகி ஆனந்திக்கு படத்தில் வசங்னள் குறைவு என்றாலும் முக பாவனைகளால் ‘கயல்’ கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளார். படத்தின் மற்ற கேரக்டர்களில் வரும் அத்தனை பேரையும் நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். அதில் ராஜா வேடம் போட்டு வரும் அந்த தாத்தா மனதில் நிற்கிறார்.

பலம்

1. நடிகர்களின் யதார்த்தமான பங்களிப்பும், கிளைமேக்ஸ் காட்சியும்
2. அழகான லொகேஷ்னகளும், அதை படம் பிடித்திருக்கும் மகேந்திரனின் ஒளிப்பதிவும்
3. கலை இயக்கம்
4. பின்னணி இசை

பலவீனம்

1. இடைவேளைக்கு பிறகு வரும் தேவையில்லாத சில காட்சிகள்
2. பாடல்கள் அடிக்கடி இடம்பெறுவது

மொத்தத்தில்

பிரபு சாலமனின் முந்தைய படங்கள் தந்த அழுத்தத்தை இப்படம் தரவில்லை என்றாலும் ‘கயல்’ பார்த்து ரசிக்கக் கூடிய படம் தான்!

ஒரு வரி பஞ்ச்: ‘கயல்’ அழகானவள்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;