புத்தாண்டில் இசை, பொங்கலுக்கு ‘தல’ தரிசனம்!

புத்தாண்டில் இசை, பொங்கலுக்கு ‘தல’ தரிசனம்!

செய்திகள் 26-Dec-2014 10:29 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலுக்கு ‘வருமா வராதா?’ என்ற கேள்விக்கு இப்போது வரை யாருக்கும் உறுதியாக விடை தெரியாது. ஆனாலும், ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ படங்களின் ‘பொங்கல் ரிலீஸ்’ அறிவிப்பு போஸ்டர்கள் தினமும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதோடு ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல் ‘இதோ வருகிறது... அதோ வருகிறது...’ என கடந்த சில நாட்களாக ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘புத்தாண்டில் இசை’ என ‘என்னை அறிந்தால்’ டீமே பத்திரிகை விளம்பரம் கொடுத்துவிட்டது.

ஹாரிஸின் இசையமைப்பில் மொத்தம் 6 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ‘அதாரு அதாரு...’ பாடல் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;