இன்று மாலை பாலச்சந்தரின் இறுதி சடங்கு!

இன்று மாலை பாலச்சந்தரின் இறுதி சடங்கு!

செய்திகள் 24-Dec-2014 11:09 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பிதாமகன் என்றும் இயக்குனர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டு வந்த கே.பாலச்சந்தர் நேற்று மாலை காலமானார்! அவருக்கு வயது 84. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மைலாப்பூர் வாரன் ரோட்டிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 3 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறது. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவையொட்டி அனைத்து சினிமா வேலைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;