உதயநிதி ஸ்டாலினுக்கு சூர்யாவின் பாராட்டு!

உதயநிதி ஸ்டாலினுக்கு  சூர்யாவின் பாராட்டு!

செய்திகள் 24-Dec-2014 10:40 AM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘நண்பேன்டா’. இயக்குனர் எம்.ராஜேஷிடம் அசிஸ்டென்ட் இயக்குனராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட்’ மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள தேவி திரையரங்கில் நடந்தது. படத்தின் டிரைலரை இயக்குனர் எம்.ராஜேஷ் வெளியிட, தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார். ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட, நடிகர் ஆர்யா பெற்றுக் கொண்டார். ஆடியோவை வெளியிட்டு சூர்யா பேசும்போது,

‘‘இந்த தியேட்டர் வளாகத்திற்கு வந்ததும் திருவிழா கூட்டம் மாதிரி ரசிக்ரகள் கூடியிருந்ததை பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இரண்டு படங்களில் நான் நடித்திருக்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களுக்கு அவர் முதலாளியாக இருந்தார் என்பதால் நான் அவரை பாஸ் என்று தான் அழைப்பேஎன். வசதி இருந்தாலோ, வாரிசு நடிகராக இருந்தாலோ சினிமாவில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான கடின முயற்சிகளும் இருக்க வேண்டும். அது உதயநிதி ஸ்டாலினிடம் இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் நடித்துள்ள நயன்தாரா அழகாகவும் இருக்கிறார், நல்லா பெர்ஃபார்மென்ஸும் பண்ணியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றதைப் போல இப்படமும் டபுள் ஹிட் ஆகும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;