நிம்மதியாக உறங்குங்கள் இயக்குனர் சிகரமே!

நிம்மதியாக உறங்குங்கள் இயக்குனர் சிகரமே!

செய்திகள் 23-Dec-2014 7:36 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமா இயக்குனர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் கே.பாலசந்தர். 100 படங்களுக்கும்மேல் இயக்கியுள்ள அவரை ‘இயக்குனர் சிகரம்’ என்று தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாலசந்தர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. இதனால் தமிழ்த் திரையுலகமே பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட இப்படி ஒரு செய்தியை சிலர் அவசரகதியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், இப்போது பாலசந்தர் உண்மையாகவே இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த செய்தியைக் கேட்டு ‘இதுவும் வதந்தியாக இருக்கக்கூடாதா?’ என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பாலசந்திரின் சாதனைகளையும், அவர் படைப்புகளையும் பற்றி பேசத் தொடங்கினால் பக்கங்கள் நீண்டு கொண்டே செல்லும். இயக்கம் மட்டுமின்றி அவ்வப்போது நடிகராகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வார் பாலசந்தர். தற்போதுகூட கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

80 வருடங்களுக்கும் மேலாக இந்த மண்ணுலகில் ஓயாத பயணத்தில் ஈடுபட்ட இந்த ‘இயக்குனர் சிகரம்’ இனி விண்ணுலகில் நிம்மதியாக உறங்கட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;