அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் விஜய்?

அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் விஜய்?

செய்திகள் 23-Dec-2014 11:45 AM IST VRC கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகம் பிடித்துள்ளது. இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய காலகட்டம் என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நடப்பது மாதிரியாம்! இப்படம் குறித்த புதிய தகவலின் படி இப்படத்தில் விஜய் தந்தை - மகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விஜய் ‘அழகிய தமிழ் மகன்’, ‘கத்தி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘வில்லு’ படத்தில் விஜய்யின் தந்தையாக விஜய் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சியில் மட்டும் தான் வருவார். ஆனால் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யின் தந்தை – மகன் கேரக்டர்கள் சம முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாம். விஜய்யுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் என்பதும், ‘நட்டி’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;