டிசம்பர் 27-ல் ‘ஹிப் பாப் தமிழா’வின் முதல் ஆல்பம்!

டிசம்பர் 27-ல் ‘ஹிப் பாப் தமிழா’வின் முதல் ஆல்பம்!

செய்திகள் 23-Dec-2014 10:23 AM IST VRC கருத்துக்கள்

விஷால் - சுந்தர்.சி. கூட்டணி அமைத்துள்ள ‘ஆம்பள’ படத்தை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதால் படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அத்துடன் பாடல் வெளியிட்டு விழாவுக்கான ஏற்பாடுகளையும் ‘ஆம்பள’ படக் குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். இப்படத்தின் ஆடியோவை வருகிற 27-ஆம் தேதி பிரம்மாண்டமான் விழாவில் வெளியிட இருக்கிறார்கள். ‘அரண்மனை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கியுள்ள படம், ‘பூஜை’ வெற்றி படத்தை தொடர்ந்து விஷால் தயாரித்து நடித்துள்ள படம் இது என்பதோடு, ’ஹிப் பாப் தமிழா’ ஆதி முதன் முதலாக இசை அமைத்துள்ள படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு உண்டு! படத்தை ஆரம்பிக்கும்போதே வெளியீட்டு தேதியை குறித்து, சரியாக படத்தை ரிலீஸ் செய்து வரும் விஷாலின் அடுத்த படைப்பான ‘ஆம்பள’யை பார்க்க ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;