‘ஐ’ பட உரிமையை வாங்கிய ‘அனேகன்’ பட நிறுவனம்!

‘ஐ’ பட உரிமையை வாங்கிய ‘அனேகன்’ பட நிறுவனம்!

செய்திகள் 22-Dec-2014 1:33 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படம் பொங்கலுக்கு வெளியாவதற்கான வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. டீஸரைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலருக்கும் பலத்த வரவவேற்பு கிடைத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதை ‘யு’வாக மாற்றும் முயற்சியில் தற்போது ‘ஐ’ டீம் களமிறங்கியிருக்கிறதாம்.

இந்நிலையில், ‘ஐ’ படத்தின் வெளியீட்டு உரிமைகளை விற்கும் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. எனவே பொங்கலுக்கு வெளியாகும் ‘ஐ’ படத்துடன் ‘அனேகன்’ டிரைலரும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;