கிறிஸ்துமஸ் ரிலீஸ்: இறுதிப் பட்டியலில் 5 படங்கள்!

கிறிஸ்துமஸ் ரிலீஸ்: இறுதிப் பட்டியலில் 5 படங்கள்!

செய்திகள் 22-Dec-2014 11:09 AM IST Chandru கருத்துக்கள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெளியாவதற்கு பல படங்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. அதில் தற்போது 5 தமிழ் படங்கள் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கியிருக்கும் கயல் படம் ஏற்கெனவே அறிவித்தபடி கிறிஸ்துமஸிற்கு களமிறங்குவது உறுதியாகிவிட்டது. சந்திரன், ஆனந்தி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். காதலை மையமாகக் கொண்ட இப்படத்தின் விஷுவல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெறவிருக்கும் சுனாமி காட்சி பெரிய வரவேற்புப் பெறும் என்று நம்பப்படுகிறது.

அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிடும் ‘கப்பல்’ படமும் டிசம்பர் 25ல் ரிலீஸாவது உறுதிசெய்யப்பட்டு நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாகிறது. ஷங்கரின் உதவி இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கும் இப்படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா நடித்திருக்கிறார்கள். ரொமான்ஸ் காமெடிப் படமான இதற்கு இசையமைத்திருக்கிறார் நடராஜன் சங்கரன்.

‘தடையறத் தாக்க’ படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி ஆர்யாவை அதிரடி நாயகனாக்கி இயக்கியிருக்கும் படம் ‘மீகாமன்’. இப்படமும் நாளைமுதல் ரிசர்வ் செய்யப்படுகிறது. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்குராஜா’ என தனது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்த ‘ஹிட்’ கொடுத்த எழில் தற்போது விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் ‘வெள்ளக்கார துரை’ படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு முதல்முறையாக கிராமத்து வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கும் நாளை முதல் முன்பதிவு ஆரம்பமாகிறது.

இந்த 4 படங்களோடு மகேந்திரன் நடித்திருக்கும் ‘என்றுமே ஆனந்தம்’ படமும் இந்த கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களின் பட்டியலில் கடைசியாக இணைந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’, ராகவா லாரன்ஸின் ‘கங்கா’ ஆகிய படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டீசர்


;