விஷ்ணுவுடன் இணைந்த ‘அமரகாவியம்’ மியா

விஷ்ணுவுடன் இணைந்த ‘அமரகாவியம்’ மியா

செய்திகள் 22-Dec-2014 9:51 AM IST Chandru கருத்துக்கள்

‘நான்’ ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’ படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் மலையாள நடிகை மியா ஜார்ஜ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக போகவில்லை என்றாலும், கதாநாயகி மியாவின் நடிப்பைப் பலரும் பாராட்டினர். அந்த பாராட்டுக்களுக்குப் பலனாக தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மியா.

‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மியா. ‘முண்டாசுப்பட்டி’ படத்தைத் தொடர்ந்து சி.வி.குமாரின் தயாரிப்பில் இரண்டாவது முறையாக விஷ்ணு நடிக்கும் இப்படத்தை ரவி என்பவர் இயக்குகிறார். விஷ்ணுவுடன் இணைந்து கருணாகரனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் சாய் ரவி வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, ஒளிப்பதிவை வசந்த் கவனிக்க, எடிட்டிங் பணிகளை லியோ ஜான் பால் மேற்கொள்கிறார். கடந்த அக்டோபர் 3ஆம் தேதி இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;