விகடன் குழுமத் தலைவர் மறைவு!

விகடன் குழுமத் தலைவர் மறைவு!

செய்திகள் 20-Dec-2014 12:44 PM IST VRC கருத்துக்கள்

விகடன் பத்திரிகை குழுமத்தின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் நேற்று மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. தந்தை எஸ்.எஸ்.வாசன் வழியை பின்பற்றி பத்திரிகை துறையிலும், சினிமா துறையிலும் முத்திரை பதித்த பாலசுப்ரமணியன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே ’ஆகியவை இவர் இயக்கிய திரைப்படங்களாகும். தமிழ் இதழியலின் முதல் அரசியல் சமூக புலனாய்வு பத்திரிகையான ஜூனியர் விகடனை தொடங்கியவரும் இவர் தான். இப்படி பத்திரிகை துறையிலும் சினிமா துறையிலும் அரிய சாதனைகள் படைத்த பாலசுப்ரமணியத்தின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;