சுற்றுலா - விமர்சனம்

உற்சாகம் குறைவு!

விமர்சனம் 20-Dec-2014 10:38 AM IST Top 10 கருத்துக்கள்

தயாரிப்பு : ‘பர்ப்பிள் விஷன்’ எம்.ஜெயகுமார்
இயக்கம் : ராஜேஷ் ஆல்பிரட்
நடிப்பு : ரிச்சர்ட், மிதுன், பிரஜன், சான்ட்ரா, ஸ்ரீஜி
ஒளிப்பதிவு : ரவி ஸ்வாமி
இசை: பரணி
எடிட்டிங் : ஜி.சசிகுமார்.

ஹாரர் - த்ரில்லர் பட வரிசையில் வந்துள்ள மற்றொரு படம். இந்த ‘சுற்றுலா’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

தன் நண்பர்களை சாட்சிகளாக வைத்து ஸ்ரீஜியை ரிஜிஸ்தர் திருமணம் செய்ய திட்டம் போடுகிறார் மிதுன். அதனால் தன் நண்பர்களான பிரஜன், சான்ட்ரா, அங்கிதா, ஜெகன் ஆகியோரை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து வருகிறார். அதோடு தன் காதலி ஸ்ரீஜியையும் ரகசியமாக ஊட்டிக்கு வரச் சொல்லி, அவரை ஒரு ஹோட்டலில் தனியாக தங்க வைக்கிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனியாக மாட்டிக்கொள்ளும் ஸ்ரீஜி, காட்டு பங்களாவில் வசிக்கும் சைக்கோ குணம் கொண்ட ரிச்சர்ட்டிடம் அடைக்கலமாகிறார். ஸ்ரீஜியை பார்த்ததும் அவளை சொந்தமாக்க நினைக்கிறார் ரிச்சர்ட். ஆனால், நணபர்கள் முன்னிலையில் மிதுனுக்கும், ஸ்ரீஜிக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. இதை பொறுக்காத ரிச்சர்ட், மிதுனையும் அவனது நண்பர்களையும் தனித்தனியாக வித்தியாசமான முறையில் கொலை செய்து, ஸ்ரீஜியை சொந்தமாக்க திட்டம் போடுகிறார். இதில் யார் யார் தப்பிக்கிறார்கள் என்பது பரபரப்பான கிளைமேக்ஸ்.

படம் பற்றிய அலசல்

வித்தியாசமான ஒரு த்ரில்லர் படத்தை தர முயற்சித்துள்ளார் இப்படத்தை இயக்கியிருக்கும் ராஜேஷ் ஆல்பிரட். ஆனால் அதற்கேற்ற வகையில் வலுவான திரைக்கதையை அமைக்க தவறிவிட்டார். காதலியை மணப்பதற்கு எதற்காக ஊட்டிக்கு வரவேண்டும் என்ற பெரிய லாஜிக் ஓட்டையோடு இன்னும் சில லாஜிக்குகளும் படத்தில் இடிக்கிறது. மிதுனின் நண்பர்களை கொலை செய்ய முயற்சிக்கும் ரிச்சர்ட்டின் வித்தியாசமான யுக்தியும், அவர் ஏன் ஸ்ரீஜியை சொந்தமாக்க நினைக்கிறார் என்பதற்கான ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் சுவாரஸ்யம். பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்றவை ஓகே.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தில் ரிச்சர்ட், மிதுன், ஸ்ரீஜி ஆகியோருக்கு தங்களது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தக் கூடிய கேரக்டர்கள்! அதில் அனைவரும் நன்றாக நடித்து பாஸ் மார்க் வாங்கவும் செய்திருக்கிறார்கள்! பிரஜன், சான்ட்ரா, ஜெகன், அங்கிதா ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர்கள் அமையவில்லை! இருந்தாலும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து அதற்கு வலிமை சேர்த்துள்ளனர்.

பலம்

1. வித்தியாசமான கதைக்களம்
2. ஒளிப்பதிவு, பின்னணி இசை.
3. க்ளைமேக்ஸ்

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களில் அக்கறை காட்டாத திரைக்கதை அமைப்பு
2. பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லாதது

மொத்தத்தில்..

லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் இரண்டு மணி நேரம் பொழுதைக் கழிக்க நினைப்பவர்கள் இந்த சுற்றுலாவுக்கு சென்று வரலாம்.

ஒரு வரி பஞ்ச் : உற்சாகம் குறைவு!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;