மல்டிப்ளக்ஸ் ஆகும் சாந்தி தியேட்டர்!

மல்டிப்ளக்ஸ் ஆகும் சாந்தி தியேட்டர்!

செய்திகள் 18-Dec-2014 2:45 PM IST VRC கருத்துக்கள்

சென்னை அண்ணா சலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் வளாகம் புனரமைக்கப்பட்டு அங்கு அதிநவீன 4 திரையரங்குகளை கட்ட முடிவெடுத்துள்ளனர். நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த தியேட்டர் வளாகம் கடந்த 53 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்குள் இப்போது சாந்தி மற்றும் சாய் சாந்தி என இரண்டு தியேட்டர்கள் இயங்கி வருகிறது. சிவாஜி கணேசன் நடித்த அத்தனை படங்களும் இந்த தியேட்டரில் திரையிடப்படுவது வழக்கம். ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படம் கூட இந்த தியேட்டரில் வெளியாகி தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஏற்கெனவே பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியுள்ள நிலையில் சாந்தி தியேட்டர் வளாகத்தை புனரமைப்பு செய்து அங்கு 4 தியேட்டர்கள் வரவிருப்பது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உத்தரவு மகாராஜா - டீசர்


;