புதுமுகங்கள் நடிக்கும் காத்தம்மா!

புதுமுகங்கள் நடிக்கும் காத்தம்மா!

செய்திகள் 18-Dec-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், மலையாள மொழிகளில் 50 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராக பணிபுந்தவர் சுகுமாரன். இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம் ’காத்தம்மா’. இப்படத்தில் புதுமுகங்கள் பிஜுராம், ஆதிரா, அசோக்ராஜ், அலி, ரவீந்திரன் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். ‘போகன் வில்லா ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் ஜோஸ்.எம்.தாமஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜில்லன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. ‘காத்தம்மா’ படம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுகுமாரன் கூறும்போது,

‘‘காத்தம்மா என்றால் காக்கும் அம்மா என்று பொருள்! பாதிக்கப்பட்டவர்கள் பழி வாங்கும் கதை இது. இதில் அழகான காதலும் இருக்கிறது. அதை இயல்பான காட்சிகளுடன் இயற்கை எழிலான குமுளி, மூணாறு பகுதிகளில் படமாக்கியுள்ளோம். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;