கீ போர்ட் பிளேயரை இசையமைப்பாளர் ஆக்கிய விஜய் ஆண்டனி

கீ போர்ட் பிளேயரை இசையமைப்பாளர் ஆக்கிய விஜய் ஆண்டனி

செய்திகள் 18-Dec-2014 11:05 AM IST VRC கருத்துக்கள்

‘நான்’, ‘சலீம்’ படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. ‘யாரடி நீ மோகினி’ படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹரிடம் உதவியாளராக இருந்த ஆனந்த், ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தை இயக்குகிறார். இவரது தம்பி ஓம் ஒளிப்பதிவு செய்கிறார், அண்ணன் இயக்க, தம்பி ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு விஜய் ஆன்டனியிடம் கீபோர்ட் பிளேயராக இருந்த தீனா தேவராஜன் இசை அமைத்திருக்கிறார். ‘‘இந்தியா பாகிஸ்தான்’ என்றதும் இப்படம் ஏதோ சமூக பிரச்சனைகளை சொல்ல வருகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம், இப்படம் அழகான ஒரு காதல் கதை’’ என்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக புதுமுகம் சுஷ்மா நடித்திருக்க, இப்படத்தின் பாடல்கள் நாளை (19-12-14) வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;