ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் புறம்போக்கு!

ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் புறம்போக்கு!

செய்திகள் 18-Dec-2014 10:48 AM IST VRC கருத்துக்கள்

கடந்த ஒரு சில நாட்களாக பெங்களூரில் ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இங்கு ஹெலிகாப்டரை வைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடிக்கிறார்கள். ‘யு.டி.வி.’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் சமூக கருத்துக்களை சொல்லும் படமாம். புது இசை அமைப்பாளர் வர்ஷன் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கிறது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;