வருகிறது ‘நாய்கள் ஜாக்கிரதை’ 2-ஆம் பாகம்!

வருகிறது ‘நாய்கள் ஜாக்கிரதை’ 2-ஆம் பாகம்!

செய்திகள் 18-Dec-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிபிராஜ் நடித்து சமீபத்தில் ரிலீசான ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் படு உற்சாகமடைந்துள்ள சிபிராஜ் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம். ரஜினியின் ‘லிங்கா’ படம் வெளியான நிலையில் கூட இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யராஜின் ‘நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி” தயாரித்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தினை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய உரிமை கேட்டும் நிறைய பேர் சிபிராஜை தொடர்பு கொண்டுள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றுள்ளதால் வேறு படங்களில் நடிக்கவும் சிபிராஜுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;