‘‘கே.பி. சார் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’’ - விவேக்

‘‘கே.பி. சார் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’’ - விவேக்

செய்திகள் 17-Dec-2014 1:43 PM IST Chandru கருத்துக்கள்

உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஒரு சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலசந்தர். ரஜினி, குஷ்பு, மனோபாலா, சரண், விவேக் உட்பட பலரும் அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டில் படப்பிடிப்பிலிருக்கும் கமல், பாலசந்தர் உடல்நிலை முன்னேற வேண்டி வாழ்த்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இது ஒருபுறமிருக்க, சில விஷமிகள் பாலசந்தரைப் பற்றிய தவறான வதந்திகளை இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். இதைப் பலரும் உண்மை எனக்கருதி அவரின் குடும்பத்திற்கு வருத்தங்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். மேற்கண்ட அந்த வதந்தி செய்தியை உண்மை என்று நம்பிய இயக்குனர் ராம் கோபால் வர்மாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பாலசந்தரின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களை தெரிவித்திருந்தார். பின்னர் உண்மையை அறிந்ததும் அந்த செய்தியை நீக்கிவிட்டு, அதற்கு மறுப்பும், மன்னிப்பும் தற்போது தெரிவித்திருக்கிறார்.

நிலைமை இப்படியிருக்க, உண்மையில் இயக்குனர் பாலசந்தரின் உடல்நிலை தற்போது எப்படியிருக்கிறது என்பதை நேரில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் நடிகர் விவேக். இதுகுறித்து தனது ‘ட்வீட்’டில், ‘‘இப்பொழுதுதான் மருத்தவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். ஜாம்பவான் கே.பி. சாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நம் பிரார்த்தனை அவரை விரைவில் குணமடையச் செய்யும். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;