ஆர்.கே.யின் புதிய விளம்பர யுக்தி!

ஆர்.கே.யின் புதிய விளம்பர யுக்தி!

செய்திகள் 17-Dec-2014 1:38 PM IST VRC கருத்துக்கள்

ஆர்.கே.நடித்துள்ள ‘என் வழி தனி வழி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்தப் படத்தின் மூலம் புதிய ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்.கே. இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இனி வரும் காலம் தொழில் நுட்பத்தின் கையில் தான் இருக்கிறது. ‘என் வழி தனி வழி’ படத்தின் ஆடியோவை விமானத்தில் பறந்த படியே வித்தியாசமாக வெளியிட எண்ணினேன். ஆனால் அதை விட இந்த புதிய முயற்சியை மீடியா நண்பர்கள் முன்னாடி வெளியிட விரும்பிதான் இந்த நிகழ்ச்சி! இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை ரசிகர்கள் இனி இருந்த இடத்திலேயே தங்கள் மொபைல் மூலம் பார்க்க முடியும். அதற்கான புதிய தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தியுள்ளோம். இதன் படி இப்படத்தின் விளம்பரத்தையோ, போஸ்டரையோ ரசிகர்கள் தங்கள் மொபைல் மூலம் க்ளிக் செய்தால் போதும்! பாடல்களையும், டிரைலரையும் உடனே மொபைலில் பார்த்து விடலாம். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக இப்படத்தில் பயன்படுத்தியிருப்பதில் பெருமை கொள்கிறேன். இனி வரும் காலங்களில் ஒருவருடைய விவரம் தேவை என்றால் அவருடைய ஒரு புகைப்படம் இருந்தால் போதும். அதன் மூலம் அவருடைய எல்லா விவரங்களும் தெரிந்து விட முடியும். அது மாதிரியான ஒரு புதிய தொழில்நுட்பம் தான் இது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;