அதிர்ஷ்டம்தான் என் வெற்றிக்கு காரணமா? - ஹன்சிகா பதில்

அதிர்ஷ்டம்தான் என் வெற்றிக்கு காரணமா? - ஹன்சிகா பதில்

செய்திகள் 17-Dec-2014 12:36 PM IST Chandru கருத்துக்கள்

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் ஹன்சிகா. அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாக அமைந்திருக்கின்றன. இந்த வருடம்கூட சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா நடித்த ‘அரண்மானை’ படம் வசூலில் மிரட்டியது. ஹன்சிகாவின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் அதிர்ஷ்டம் மட்டுமா? அவரே பதில் சொல்கிறார்...

‘‘அரண்மனை திரையுலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்துள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கை கொண்டு அந்த கதாபாத்திரத்தை சுந்தர்.சி சார் எனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர், தொடர்ந்து தன்னுடைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார். பொங்கலன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும்.

டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும். அடுத்து வெளிவரும் ‘உயிரே உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்துள்ளேன். இதனைத் தொடர்ந்து நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு’ எனக்கு மிகப் பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம்.

இதற்கெல்லாம் மேலே விஜய் சாருடன், சிம்பு தேவன் இயக்கதில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாகதான் உணர்கிறேன். சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர். கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்!’’ இவ்வாறு பதில் கூறியிருக்கிறார் நடிகை ஹன்சிகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;