‘மொக்க பட’த்திற்காக மா.கா.பா பாடிய பாடல்!

‘மொக்க பட’த்திற்காக மா.கா.பா பாடிய பாடல்!

செய்திகள் 17-Dec-2014 10:38 AM IST Top 10 கருத்துக்கள்

‘சந்திரா மீடியா விஷன்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘மொக்க படம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘காதல்’, ‘வெயில்’ போன்ற படங்களின் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதோடு ஏற்கனவே ‘வீரசேகரன்’ படத்தில் அமலாபாலுடன் கதாநாயகனாக நடித்தவர். இந்த ‘மொக்க பட’த்தில் கதாநாயகியாக அமிர்தா நடிக்கிறார். மற்றும் ஸ்ரீமன், தம்பி பிரபாகர், யோகிபாபு, சேரன்ராஜ், ‘முண்டாசுபட்டி’ சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக நடிகர் மா.கா.பா.ஆனந்த் முதன்முதலாக ‘லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க...’ என்ற பாடலை பாடி இருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் வல்லவன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கண் கட்டுதே - டிரைலர்


;