இத்தாலியில் டூயட் பாடும் விஷால், ஹன்சிகா!

இத்தாலியில் டூயட் பாடும் விஷால், ஹன்சிகா!

செய்திகள் 17-Dec-2014 9:53 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ‘ஆம்பள’ படத்தின் ஷூட்டிங் தற்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி, ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் ‘டாக்கிங் போர்ஷனு’க்கான படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, தற்போது பாடல்களை படமாக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் சுந்தர்.சி.

மற்ற பாடல்கள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் 2 பாடல்கள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இந்த 2 பாடல்களையும் இத்தாலிக்குச் சென்று படமாக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ‘ஆம்பள’ டீம். விஷால், ஹன்சிகா ஆகியோருடன் இந்த வாரத்தில் இத்தாலிக்குப் பறக்கும் படக்குழுவினர், அங்கே இந்த 2 பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு கிறிஸ்துமஸிற்குள் சென்னை திரும்புகிறார்களாம். வந்தவுடன் ‘ஹிப் ஆப் தமிழா’ ஆதி இசையமைத்திருக்கும் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தற்போது பின்னணி இசையமைக்கும் பணி மும்பையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;