‘என் வழி தனி வழி’யை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ்!

‘என் வழி தனி வழி’யை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ்!

செய்திகள் 17-Dec-2014 9:34 AM IST VRC கருத்துக்கள்

ஷாஜி கைலாஸ் இயக்கி, ஆர்.கே.நடித்துள்ள ‘என் வழி தனி வழி’ படத்தின் பாடல்களை ‘இளைய தளபதி’ விஜய் வெளியிட வேண்டும் என்று விரும்பிய இப்படக் குழுவினர், அதற்காக விஜய்யை சிம்பு தேவன் இயக்கும் படத்தின் செட்டில் நேற்று (16-12-14) சந்தித்து ‘என் வழி தனி வழி’ படப் டல்களை வெளியிட செய்தனர். அதன் பிறகு சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்ற விழாவில் ஆர்.கே. பேசும்போது, ‘‘2015-ல் மூன்று படங்களை தயாரித்து, நடித்து வெளியிட முடிவு செய்துள்ளேன். அதில் முதல் படமாக ‘என் வழி தனி வழி’யை ஜனவரி 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதனை தொடர்ந்து இதே டீமுடன் மீண்டும் இணைந்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தை துவங்கவுள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி மாதம் துவங்கும். இப்படத்தையும் ஷாஜி கைலாஸே கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் நடித்ததில் இருந்து ஷாஜி கைலாஸ் என்னுடைய நெருங்கிய நண்பராகி விட்டார். தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்றுவது சௌகர்யமாக இருக்கிறது’’ என்றார்.
‘என் வழி தனி வழி’ படத்தில் ஆர்.கே.யுடன் பூனம் கௌர் ஜோடியாக நடித்திருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;