‘தீபக்’குக்கு தண்ணீல கண்டம்!

‘தீபக்’குக்கு தண்ணீல கண்டம்!

செய்திகள் 16-Dec-2014 10:44 AM IST VRC கருத்துக்கள்

சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான தீபக் முதன் முதலாக நடிக்கும் திரைப்படம் 'இவனுக்கு தண்ணீல கண்டம்'.

‘‘வித்தியாசமான தலைப்பை கொண்ட இப்படம் உலகம் வெப்பமயம் ஆவதையோ , தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேச வரவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னணியில் இருக்கும் மது கேளிக்கைகள் , அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை ஜனரஞ்சகமாகவும், நகைசுவையுடனும் சொல்லும் படமே இது’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் சக்திவேல்.

‘‘நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ, சின்ன வேடமோ ....சின்னத் திரையோ , பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இப்படத்தில் கூட நான் ஒரு சின்னத்திரை தொகுப்பாளனாக தான் நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இடம்பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்கிறார் இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கும் தீபக். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 - டிரைலர்


;