‘திருடன் போலீஸை’ தொடர்ந்து மூணே மூணு வார்த்தை!

‘திருடன் போலீஸை’ தொடர்ந்து மூணே மூணு வார்த்தை!

செய்திகள் 15-Dec-2014 4:29 PM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் தனது ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு ‘மூணே மூணு வார்த்தை’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா இயக்குகிறார். இதுவரை எஸ்.பி.பி.சரண் தயாரித்த அத்தனை படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கியிருந்தார்கள். ஆனால் இப்படத்தை ஏற்கெனவே இரண்டு படங்களை இயக்கிய மதுமிதாவிடம் இயக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார் எஸ்.பி.பி.சரண். வழக்கமாக தனது ஒவ்வொரு படங்களிலும் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் எஸ்.பி.பி.சரண் இப்படத்திலும் 5 முக்கியமான டெக்னீஷியன்களை அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் யார் என்பதையும், படத்தில் யார் யார் நடித்துள்ளார்கள் என்பதையும் விரைவில் ஒரு விழாவை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளார் எஸ்.பி.பி.சரண். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மூணே மூணு வார்த்தை - டீசர்


;