பிரபல இசை அமைப்பாளர் மாரடைப்பால் மரணம்!

பிரபல இசை அமைப்பாளர் மாரடைப்பால் மரணம்!

செய்திகள் 15-Dec-2014 1:14 PM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் சக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40. முதலில் தனி இசை ஆல்பங்களுக்கு இசை அமைந்து வந்த இவரை சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பூரி ஜெகநாத் ஆவார். இவர் இயக்கிய ‘பச்சி’ திரைப்படம் தான் சக்ரி இசை அமைத்த முதல் தெலுங்கு படம். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 85 படங்களுக்கு இசை அமைத்துள்ள சக்ரியின் சொந்த ஊர் ஆந்திரா, வாரங்கல் மாவட்டத்திலுள்ள மஹாபுபாத் ஆகும். இவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. ஏராளமான பாடலாசிரியர்களையும், பாடகர்களையும் அறிமுகப்படுத்தியுள்ள சக்ரியின் திடீர் மரணம் ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆந்திரா மெஸ் - டிரைலர்


;