விஜய் தம்பியாக நடிக்க தனுஷுக்கு வந்த வாய்ப்பு!

விஜய் தம்பியாக நடிக்க தனுஷுக்கு வந்த வாய்ப்பு!

செய்திகள் 15-Dec-2014 12:04 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்த ‘பகவதி’ படத்தை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்திருந்தார். இந்த தம்பி கேரக்டருக்கு முதலில் ஏ.வெங்கடேஷ் அணுகிய நடிகர் தனுஷ்! அப்போது ‘துள்ளுவதோ இளமை’ பட வெற்றிக்கு பிறகு தனுஷ், ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்து கொண்டிருந்த நேரம்! இயக்குனர் வெங்கடேஷ், தனுஷிடம் அந்த தம்பி கேரக்டர் குறித்து சொன்னதும் தனுஷ், ‘‘இல்ல அண்ணே ‘துள்ளுவதோ இளமை’ படத்தைப்போல இப்படத்திலும் நான் ஹீரோவா நடிக்கிறேன்! அப்படியிருக்கும்போது எப்படி அண்ணே தம்பி கேரக்டர்ல நடிப்பது?’’னு இழுத்தாராம் தனுஷ்! அதன் பிறகு தான் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அந்த கேரக்டரில் ஜெய்யை நடிக்க வைத்துள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த ‘சண்டமாருதம்’ பட ஆடியோ விழாவுடன் தனுஷ் நடிக்கும் ‘மாரி’ படத்தின் அறிமுகவிழாவும் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது தனுஷின் தன்னம்பிக்கை குறித்தும், தீர்கதரிசனம் குறித்தும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது தான் இந்த தகவலை சொன்னார் அவர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;