‘காதல் போல் வேறேது’வில் சொல்லிக் கொள்ளாத காதல்!

‘காதல் போல் வேறேது’வில் சொல்லிக் கொள்ளாத காதல்!

செய்திகள் 15-Dec-2014 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீவிஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ்’ பட நிறுவனம் சார்பாக ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘காதல் போல் வேறேது’.

இப்படத்தில் புதுமுகம் எஸ்.ஆர்.அருண்ராஜ் கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணபிரியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் வி.கே.சிதம்பரம் படம் குறித்து கூறியவை:

‘‘படத்தின் ஹீரோ கண்ணன் ஹீரோயின் தமிழை காதலிக்கிறார், தமிழும் காதலிக்கிறார். ஆனால் இவர்கள் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத காதல். அதை சில கெட்ட நண்பர்கள் திசை திருப்பிவிட்டு, கண்ணனை குடிகாரனாக்கி விடுகிறார்கள். இதை அறிந்த கண்ணனின் நண்பர்கள் அவனது எதிர்காலத்தை கெடுக்கும் காதலையும், கெட்ட சகவாசத்தையும் தடுக்க தமிழிடம் அவள் மனம் நோகும் அளவிற்கு பேசி அவளே அந்த காதலை கைவிடும் அளவிற்கு செய்து விடுகிறார்கள். அதனால் மனம் உடைந்த கண்ணன் அனைத்திலும் இருந்து விடுபட்டு வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுகிறார்.

முடிவில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதை’’ என்றார்.
இப்படத்திற்கு விமல் முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகோபிநாத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, முட்டம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;