‘காவலன்’ மித்ரா குரியனுக்கு ஜனவரியில் திருமணம்!

‘காவலன்’ மித்ரா குரியனுக்கு ஜனவரியில் திருமணம்!

செய்திகள் 15-Dec-2014 10:57 AM IST Chandru கருத்துக்கள்

விஜய், அசின் நடித்து வெளிவந்த ‘காவலன்’ படத்தில் முக்கிய வேடமொன்றில் மலையாள நடிகை மித்ரா குரியனும் நடித்திருந்தார். இவருக்கும் இசைக்கலைஞர் வில்லியம் ஃபிரான்சிஸிற்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு ‘ஸ்டார் நைட்’ நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட மித்ரா குரியனும், வில்லியம் ஃபிரான்சிஸும் நணபர்கள் ஆனார்கள். பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியது. தங்களின் காதலைப் பற்றி இருவரும் தத்தமது பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் ‘பச்சைக்கொடி’ காட்டியதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த பேசிமுடிக்கப்பட்டிருக்கிறதாம்.

திருசூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் வில்லியம் ஃபிரான்சிஸ் 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் இசைக்கலைஞராகப் பணிபுரிந்திருக்கிறாராம். தற்போது தமிழில் ‘புத்தனின் சிரிப்பு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மித்ரா குரியன் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதா? வேண்டாமா? என்பதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;